ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (15:13 IST)

நான் ஒன்னும் அவ்ளோ வொர்த் பீஸ் இல்ல... சரண்டரான ஓபிஎஸ்

தேர்தல் நெருங்கியுள்ளதால், வெயிலின் அனலோடு, அனல் பறக்கும் பிரச்சாரங்களை அரசியல் கட்சி தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 
அந்த வகையில் ராமநாதபுரம் மக்களவை வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். எந்த கொம்பனாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என அதிமுகவின் பெருமைகளையும் அதிமுக செய்த சாதனைகளை மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
 
அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் ஜல்லிக்கட்டு நாயகனே என கோஷமிடத்துவங்கினர். இதை கேட்டதும், ஓபிஎஸ் தொண்டர்களை பார்த்து, நீங்கள் ஜல்லிக்கட்டு நாயகனே என சொல்லிவிட்டு சென்று விடுவீர்கள். 
 
அதன் பிறகு நான் எங்காவது ஜல்லிக்டட்டி துவங்கி வைக்க செல்லும் போது என்னை காளையை அடக்க சொன்னா, என் நிலைமை என்னவாகும் என கலகலப்பாக பதில் அளித்தார்.  ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த சமயத்தில்தான், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.