ஹெல்மெட் போடுங்க – வேனில் இருந்து இறங்கி கனிமொழி அட்வைஸ் !

Last Modified செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (15:47 IST)
பிரச்சாரத்தின் போது ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்த இளைஞர்களுக்கு தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி அறிவுரை வழங்கினார்.

திமுகவின் பெண்கள் அணி செயலாளரான கனிமொழி மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நிற்கிறார். இதற்காக கடந்த சில வாரங்களாக தூத்துக்குடியில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

இன்று காலை தூத்துக்குடியில் தனது வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி அந்த வழியாக டூவிலர்களில் வந்த இளைஞர்கள் ஹெல்மெட் போடாமல் வருவதைக் கவனித்து தனது வேனில் இருந்து இறங்கி அவர்களிடம் கட்டாயம் ஹெல்மெட் போடவேண்டும் என அறிவுரை செய்தார்.

அந்த இளைஞர்கள் கனிமொழியின் அறிவுரையைக் கேட்டு இனி ஹெல்மெட் அணிவதாக சொல்லி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.


இதில் மேலும் படிக்கவும் :