புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:21 IST)

மகள் ஸ்ருதியோடு சென்று வாக்களித்த கமல்

தனது மகள் ஸ்ருதிஹாசனோடு சென்று தனது வாக்கு அளித்தார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் இந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காகத் தமிழகம் முழுவதும் சூறாவளிப்பிரச்சாரம் மேற்கொண்டார் கமல். ஆனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார்.

இதையடுத்து வாக்குப்பதிவு நாளான இன்று அவர் ஜனநாயகக் கடமையான வாக்கை சென்னை ஆழ்வார்பேட்டையில் அளித்தார். அவருடன் அவரது மகள் ஸ்ருதி ஹாசனும் தனது வாக்கைப்பதிவு செய்தார்.

தமிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்கைப்பதிவு செய்துவருகின்றனர்.