செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (08:59 IST)

குடும்பத்துடன் சென்று வாக்களித்த ஆந்திர முதல்வர்..

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
 
ஆந்திராவில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுகளிலும், அருணாச்சல பிரதேசத்தில் 60வ்தொகுகளிலும், சிக்கிமில் 32 தொகுகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். அனைத்து மக்களும் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுமாறு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.