மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்

Last Updated: வியாழன், 23 மே 2019 (11:47 IST)
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட மக்களவை தேர்தல், மே 19-ஆம் தேதி வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 20-ஆம்தேதி இறுதி கட்ட வாக்கு பதிவு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தேசிய மற்றும் தனியார் ஊடங்களும்  தேர்தலுக்கு பிந்தைய தங்களின் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. 

மக்களவை தேர்தல் நிலவரம்:


கட்சிகள்  நிலவரம்
கூட்டணி 327
காங்கிரஸ் கூட்டணி 100
மற்றவை 115தமிழக நிலவரம்:

கட்சிகள் முன்னிலை
அதிமுக கூட்டணி 3
திமுக கூட்டணி 36
மற்றவை 0


தமிழக இடைத்தேர்தல் நிலவரம்:

கட்சிகள்  நிலவரம்
அதிமுக 10
திமுக 12
அமமுக 0


 

இந்த 2019 பராளுமன்ற தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக உள்ளது. வெற்றி யாருக்கு? இன்று வாக்குகள் எண்ணப்படும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது இந்திய தேசிய காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்குமா? என  தெரியவரும். இந்த 2019 பராளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள அரசியல் கட்சிகளுடன் மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்  கொண்டிருக்கின்றனர்.
 
2019 மக்களவை தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்களுக்காக........


பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் காலை  8 மணிக்கு தொடங்கவுள்ளன.
 
இன்று நடைபெறவுள்ள வாக்குப்பதிவு எண்ணிக்கை மையங்களில் 11,659 ஊழியர்கள், 4,245 நுண்பார்வையாளர்கள் என நாடுமுழுவதும்  மொத்தம் 15,904 பேர் மின்னணு வாக்குகளை எண்ணவுள்ளனர்.
 
நாடுமுழுவதும் 20, 600 விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் சரிபார்க்கப்படவுள்ளது.
 
தேர்வான விவிபேட் இயந்திரங்களின் தனியாக வைக்கப்படும் என தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
 
ஒரு பேரவை தொகுதிக்கு 5 விவிபேட் ஒப்புகைச்சீட்டு எண்ண தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கும் எண்ணும் மையத்தில் செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படுள்ளது. 
 
பேப்பர், நோட்பேட், பேனா, பென்சில் போன்றவற்றை எடுத்துச்செல்லவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
 
முகவர் வாக்குஎண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டருக்கு மேல் வெளியில் சென்றுவிட்டால் மீண்டும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒருமேஜைக்கு 1 முகவர், 2 கூடுதல் முகவர் என ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
 
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 8039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
 
மக்களவைத் தேர்தலில் பாஜக 435, காங்கிரஸ் 420 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறங்கியது.
 
நம் தமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதி தவிர நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
 
தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் 45 மையங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை முழுவதும் சுமார் 15000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 
 
சென்னையில் ராணிமேரி லயோலா கல்லூரி, அண்ணா பல்கலையி உள்ள மையங்களில் வாக்குகள் எண்ணப்படும்.
 
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி சென்னையில் உள்ள பிரபல தலைவர்களின் வீடுகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிகளும் மிக ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு வெளியாகவுள்ளது.
 
38 மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் 22 சட்டபேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படவுள்ளன.
 
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த சோதனைகளுக்குப் பிறகு முகவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
 
ஆட்சியாளர் அலுவலகத்திலிருந்து தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டன.
 
மக்களவைத் தேர்தலில் பாஜக-காங்கிரஸ் 273 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டன.
 
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7, 928 வேட்பாளர்களில் 724 பேர் பெண்கள்.
 
மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 7, 929 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
 
வரலாற்றில் முதல்முறையாக காங்கிரஸை விட ஒரு கட்சி அதிக இடங்களில் போட்டியிட்டது இதுவே முதல்முறை.

தபால் ஓட்டுகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டன.
 
வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிகாரிகள் உள்ளே நுழைந்ததும், ஊடகவியலாளர்கள் படம் பிடித்தனர்.

தொடக்க நிலையில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், மற்றவை 0 இடங்களில் உள்ளது.


தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் முன்னிலை.
 
கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை
 
மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை
 
காந்தி நகரில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலை.
 
சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்,ஆர். பார்த்திபன் முன்னிலை.
 
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் முன்னிலை.

சென்னையில் 3 உள்பட தமிழகத்தில் 45 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
 
மொத்தம் உள்ள  96 கோடி வாக்காளர்களில் பதிவான சுமார் 60 கோடி வாக்குகளை எண்ணும் பணி நடக்கிறது.
 
மொத்தம் உள்ள 18 லட்சம் தபால் வாக்குகளில் பதிவான 16.5 லட்சம் வாக்குகளை எண்ணும் பணி நடக்கிறது.
 
மக்களவைத் தேர்தலில் பாஜக 4, காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
 
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை.

மக்களவை தொகுதியில் பாஜக 28, காங்கிரஸ் 8 இடங்களில், பிற கட்சிகள் ஓரிரு இடங்களில் முன்னிலை.
 
நாமக்கல்லில் திமுக கூட்டணி வேட்பாளரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ் முன்னிலை.

லக்னோ மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் முன்னிலை
 
நாமக்கல்லில் திமுக கூட்டணி வேட்பாளரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ் முன்னிலை
 
அமேதியில் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை
 
காஞ்சிபுரத்தில் தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் ஜி. செல்வம் முன்னிலை 
 
கர்நாடகாவில் பாஜக 28 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை.
 
மஹாராஷ்டிராவில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
 
மதுராவில் பாஜக வேட்பாளர் நடிகை ஹேமாமாலினி முன்னிலை.

வாரணாசியில் பிரதமர் நரேந்திரமோடி முன்னிலை.
 
அரவக்குறிச்சியில் சட்டப்பேரவை தொகுதி வாக்குகளை எண்ணும் பணி இன்னும் தொடங்கவில்லை
 
நாடு முழுவதும் பாஜக 110 இடங்களில் முன்னிலை
 
நாடு முழுவதும் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை
 
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ண்ட  ஐஜேகே கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலை
 
திருநெல்வேலியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் முன்னிலை.

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை
 
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதமி சிகாமணி முன்னிலை
 
நெல்லையில் திமுக ஞானதிரவியம் முன்னிலை.
 
திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்ரசர் முன்னிலை.
 
நாமக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொ.ம.தே. கட்சியின் சின்ராஜ் முன்னிலை.
 
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலில் பாஜக 131 இடங்களிலும், காங்கிரஸ் 53 இடங்களில் முன்னிலை 
 
கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை
 
தென்சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் அரை மணி நேரமாகியும் தபால் வாக்குகள்  எண்ணும் பணி தொடங்கப்படவில்லை.

தமிழகத்தில் 9 இடங்கள் மேல் திமுக கூட்டணி  முன்னிலை
 
ஸ்ரீ பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் டி. ஆர். பாலு முன்னிலை
 
பீஹாரில் பாஜக 1 தொகுதியில் முன்னிலை
 
கர்நாடகாவில் 16 பாஜக, காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலை
 
மஹாராஸ்டிராவில் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை
 
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி 18, தெலுங்குதேசம் கட்சி 2 இடங்களில் முன்னிலை
 
ஆரணி தொகுதியில் திமுக வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுள் காங்கிரஸ் முன்னிலை
 
நாடுமுழுவதும் 150 தொகுதிகளில் பாஜக முன்னிலை
 
அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை
 
கடலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு எடுக்கப்பட்ட 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது.
 
அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பின்னடைவு.
 
தமிழகத்தில் 13 இடங்களில் திமுக முன்னிலை.
 
நெல்லை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருச்சி, பெரம்பலூர், தூத்துகுடியில் திமுக முன்னிலை,
 
தெலுங்கானாவில் தெலங்கானா ராச்டிரிய சமிதி 5, பாஜக 1 தொகுதியில் முன்னிலை.
 
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் முன்னிலை.

சிதம்பரம் தொகுதில் திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவு
 
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீர்ந்தரநாத் 1772 வாக்குககள் பெற்று முன்னிலை 
 
தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னடைவு
 
ஒட்டப்பிடாரம் மக்களவைத் தொகுதியில்  திமுக வேட்பாளர் சண்முகய்யா முன்னிலை
.
பூவிருந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமி முன்னிலை
 
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 5102 வாக்குகள் வாக்குகள் பெற்று முன்னிலை
 
நாடு முழுவதும் பாஜக 200 இடங்களில் முன்னிலை.
 
தமிழகத்தில் மக்களவை தொகுதியில் அதிமுக 4 தொகுதிகள் பெற்றுள்ளன.
 
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் முன்னிலை
 
கடலூர்: நடுவீரப்பட்டி, புலமங்குளம் வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்கு இயந்திரத்தில் கோளாறு
 
கடலூரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஸ்ரீ ரமேஷ் முன்னிலை.
 
நாடு முழுவதும் பாஜக 250க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை 
 
விழுப்புரம் திருக்கோவிலூரில் 6 ஆம் எண் சாவடியில் பதிவான வாக்கு இயந்திரத்தில் கோளாறு
 
நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ. ராஜா முன்னிலை.
 
தேனி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை.
 
கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி. ஆர். நடராஜன் முன்னிலை.
 
குஜராத்: பாஜக 10, ஆந்திரபிரதேசம் ஒய் ஆர் எஸ் 18, தெலுங்கு தேசம் 2, மற்றவை 1, கேரளா காங்கிரஸ் 15, பாஜக 1.

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ், நாஜராஜன் முன்னிலை.
 
மக்களவைத் தேர்தலில் பிறகட்சிகள் 90 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
 
நாடுமுழுவதும் பாஜக 290 இடங்களில் முன்னிலை.
 
நாடுமுழுவதும் காங்கிரஸ் 103 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
 
அறுதிப்பெரும்பான்மை பெற பாஜகவிற்கு 21 இடங்களில் வெற்றி தேவை. காங்கிரஸிற்கு 189 இடங்களில் வெற்றி தேவை. மற்றவைக்கு 179 இடங்களில் தேவை.
 
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை.

நாடுமுழுவதும் காங்கிரஸ் 103 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
 
நாடுமுழுவதும் பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
 
தமிழகம் - புதுச்சேரியில் திமுக கூட்டணி 30-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை.
 
தமிழகத்தில் அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னிலை.
 
தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் (ஓபிஎஸ் மகன்) ரவீந்தரநாத்தை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை.
 
பீகார் - பாஜக 9, மத்திய பிரதேசம் - பாஜக 27, காங்கிரஸ் 1, கர்நாடகா - பாஜக 22, காங்கிரஸ் 5, மற்றவை 1.

ராஜஸ்தானில் பாஜக 30 தொகுதிகளில் முன்னிலை.
 
டெல்லியில் பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர் முன்னிலை.
 
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை.
 
தமிழ்நாட்டில் திமுக 10 இடங்கள் பெற்று முன்னிலை.
 
தமிழகம் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 34 இடங்களில் முன்னிலை, அதிமுக 3 இடங்களில் முன்னிலை.
 
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் முன்னிலை.
 
நாடு முழுவதும் பாஜக 312 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை.
 
மெயின்புரி முலாயம் சிங் முன்னிலை, மதுரா ஹேமமாலினி முன்னிலை, போபால் பிரக்யா சாத்வி முன்னிலை.

மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாசாமி வீராசாமி முன்னிலை. 
 
தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் திமுக 11 தொகுதிகளில் முன்னிலை, அதிமுக 7 இடங்களில் முன்னிலை.
 
நாடுமுழுவதும் பாஜக 319 இடங்களில் முன்னிலை, காங்கிரஸ் 110 இடங்களில் முன்னிலை.
 
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலை.
 
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம் முன்னிலை
 
கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பின்தங்கியுள்ளார்.
 
பிலிபிட் தொகுதியில் பாஜக வேட்பாளர் வருண் காந்தி முன்னிலை.
 
தமிழகம் புதுச்சேரில் காங்கிரஸ் திமுக 35 தொகுதிகளில் முன்னிலை.
 
உத்தரபிரதேசத்தில் பாஜக 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
 
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முன்னிலை.
 
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி முன்னிலை 
 
தமிழக இடைத்தேர்தலில் திமுக 11 தொகுதிகளில் முன்னிலை, அதிமுக 8 இடங்களில் முன்னிலை.
 
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பின்னடைவு.

உத்தரபிரதேசம் - பாஜக 49, பகுஜன் 20, காங்கிரஸ் 2.
 
மகாராஷ்டிரா - பாஜக 37, காங்கிரஸ் 7, மற்றவை 1.
 
மேற்குவங்கம் - திரிணமுல் 20, பாஜக 14, மற்றவை 3.
 
தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடர்ந்து முன்னிலை.

தமிழகத்தில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் 30, 424 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார், அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக களமிறங்கிய தமிழிசை 10, 204 வாக்குகள் பெற்றுள்ளார். எனவே கனிமொழியை விட தமிழிசை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் குறைவாக உள்ளார்.
 
பஞ்சாப் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் முன்னிலை
 
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 12 இடங்களில் முன்னிலை. அதிமுக 10 இடங்களில் முன்னிலை
 
குஜராத் மக்களவைத் தொகுதியில் பாஜக 25 தொகுதிகளில் முன்னிலை
 
ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர் 22 தொகுதிகளில் முன்னிலை
 
கேரள மக்களவைத் காங்கிரஸ் 15 தொகுதிகளில் முன்னிலை, பாஜக 1 தொகுதியில் முன்னிலை
 
உத்தரபிரதேசம் மக்களவைத் தேர்தலில் பாஜக 59 இடங்களில் முன்னிலை, பகுஜன் 20, காங்கிரஸ் 2.
 
மஹாராஸ்டிராவில் பாஜக 37 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 7, மற்றவை 1 
 
மேற்குவங்கம் மக்களவைத் தொகுதியில் திரிணாமுல் 20 தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. 

கன்னியாகுமரி, நாகை, கடலூர், திருப்பூர், மக்களவை தொகுதியிலும் திமுக கூட்டணி முன்னிலை.
 
கன்னியாகுமரியில் வசந்த குமார் 38,130 வாக்குகளும், பொன் ராதா கிருஷ்ணன் 14,487 வாக்குகள் பெற்று பின்னிலையில் உள்ளார்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.ஜெயக்குமார் முன்னிலை.
 
பெரியகுளம், ஒட்டப்பிடாரம், குடியாத்தம், பரமக்குடி, திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் திமுக முன்னிலை.

சிதம்பரம், விழுப்புரம், தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூரில் திமுக கூட்டணி முன்னிலை.
 
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனித்து 282 மக்களவைத் தொகுதிகளில் முன்னிலை.
 
இடைத்தேர்தலில் ஒசூர், தஞ்சை சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை.

பாஜக கூட்டணி கட்சிகளான சிவசேனா 19, ஐக்கிய ஜனதாதளம் 15, லோக் ஜன்சக்தி 5 தொகுதிகளிலும் முன்னிலை.
 
மக்களவை தேர்தலில் 2 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
 
தமிழகம், புதுச்சேரியில் 37 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
 
22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக 11, அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை.

மம்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதல்முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.
 
சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்தது 40,054 என்ற புதிய உச்சத்தை தொட்டது. 
 
தேர்தல் முடிவுகளையடுத்து பங்குச்சந்தையில் இதுவரை இல்லாத உச்சத்தை கண்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4-ஆவது நாளாக ஏற்றம்.
 
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 282 புள்ளிகள் உயர்ந்தது 12.020 என்ற புதிய உச்சத்தில் வர்த்தகம்.
 
தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளதால் பங்குச்சந்தையில் ஏற்றம்.

திருவண்ணாமலை, கரூர், வடசென்னை, கோவை, விருதுநகர் தொகுதியிலும் திமுக கூட்டணி முன்னிலை.
 
சோளிங்கர், சாத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஒசூர், அரூர் சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக முன்னிலை.
 
வயநாடு தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகள் வித்தியசத்தில் ராகுல் காந்தி முன்னிலை.
 
நாடு முழுவதும் 294 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனித்து முன்னிலை.

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
 
குஜராத் காந்திநகரில் அமித்ஷா 1.25 லட்சம் வாக்குகள் வித்தியசத்தில் முன்னிலையில் உள்ளார்.
 
சூலூர், ஆண்டிப்பட்டி, விளாத்திகுளம், மானாமதுரை, நிலக்கோட்டை பேரவை தொகுதியில் பேரட்வை தொகுதியில் அதிமுக முன்னிலை
 
தமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக 11, அதிமுக 10 இடங்களில் முன்னிலை
 
மக்களவைத் தேர்தலில் தருமபுரி, தேனியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை
 
பீகார் மாநிலம் பெகுசராயில் சிபிஎம்எல் வேட்பாளர் கனையா குமார் பின் தங்கினார்
 
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வாக்குகளை எண்ணும் பணி தற்காலிக நிறுத்தம்
 
படூர் ஊராட்சி வாக்குச்சாவடி எண். 50 இருந்த இயந்திரத்தில் திமுகவுக்கு 2 வாக்குகள் மட்டுமே பதிவு என முகவர்கள் கூறியதால் பரபரப்பு.
 
இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வு.
 
குஜராத்தின் காந்திநகரில் அமித்ஷா 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
 
திருவண்ணாமலையில் திமுக சி.என். அண்ணாதுரை 55,023 வாக்குகளும், அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி 32,521 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

நெல்லை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருச்சி, பெரம்பலூர், தூத்துக்குடியில் திமுக கூட்டணி முன்னிலை.
 
மக்களவை தேர்தல் குறித்து ராஜினிகாந்த் ஆலோசனை. சென்னையில் உள்ள இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கத்துடன் ஆலோசனை.இதில் மேலும் படிக்கவும் :