ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (13:18 IST)

பாஜகவிற்கு ரூ. 1800 கோடி கைமாறியதா? வெளியான அதிர்ச்சி தகவல்

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பதவி வகித்த போது பாஜக மூத்த தலைவர்களுக்கு 1800 கோடி ரூபாய் கொடுத்ததாக காங்கிரஸ் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
 
தேர்தல் நெருங்குவதால் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகாரை சொல்லிவருகின்றனர். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது பாஜக மூத்த தலைவர்களுக்கு 1800 கோடி ரூபாய் கொடுத்ததாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
எடியூரப்பா பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்தது சம்மந்தமாக கைப்பற்றப்பட்ட டைரி குறித்து ஏன் இன்னும் விசாரிக்கவில்லை. லோக்பால் அமைப்பு இதனை முறையாக விசாரித்து உண்மையை வெளிகொண்டுவர வேண்டும் என கூறினார்.
 
இதற்கு பதிலளித்த எடியூரப்பா, கைப்பற்றப்பட்ட டைரிலியில் உள்ளது என் கையெழுத்தே இல்லை என வருமாவரித்துறை ஏற்கனவே கூறிவிட்டது. பாஜக மீதும் என் மீதும் கலங்கம் ஏற்படுத்தவே காங்கிரஸ் இந்த செயலை செய்து வருவதாக அவர் கூறினார்.