தேனி நாடாளுமன்ற தொகுதி காங்.வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறித்து ஒரு பார்வை

VM| Last Updated: சனி, 23 மார்ச் 2019 (12:51 IST)
தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவரை பற்றிய சில  முக்கிய விவரங்களை இப்போது பார்ப்போம். 
 

 
இளங்கோவனின் தந்தை பெயர் ஈ.வி.கே.சம்பத். 61வயதான இளங்கோவன்
பிஏ, (பொருளாதாரம்) படித்துள்ளார்.முழு நேர அரசியல் வாதியாதிமான இவர் சென்னை மனப்பாக்கம் பகுதியில்  மனைவி வரலட்சுமி உடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரின் சொந்த ஊர் ஈரோடு. தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன் தான் ஈவிகேஎஸ். 
 
1984 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 1996ல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக தன்னை இனைத்துக்கொண்டார்.
1998 முதல் 2000 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராகவும், 2000-02 வரை தலைவராகவும் பதவி வகித்தார். பின்னர் 2002-03வரை செயல் தலைவராகவும் இருந்துள்ளார்.
 
2004ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர்,  மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராக செயல்பட்டார். பின்னர் 2004-05வரை மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் 2005-09வரை மத்திய ஜவுளித்துறை அமைச்சராக செயல்பட்டார்.
2009ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட இவர் மதிமுக வேட்பாளர் கணேஷ் மூர்த்தியிடம் தோல்வி அடைந்தார். 2015-16 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவராக பதவி வகித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :