Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் கோட்டையை பிடித்த திமுக - கலக்கத்தில் அதிமுக

Written By Sugapriya Prakash
Published: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (13:57 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் திமுக வெற்றி பெற்று வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியிலும் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது.
 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
 
அதிமுகவின் கோட்டை என்று இருந்த பல வார்டுகளை திமுக கைப்பற்றி வருவதால் அதிமுக பெரும் பின்னடவை சந்திதுள்ளது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. குச்சனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
 
இதேபோல உள்ளாட்சி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஊரான எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

மானை வேட்டையாடிய 3 பேரை என்கவுண்டர் செய்த வனத்துறை!....

அம்மாவ கேட்டாதான் அப்பா யாருன்னு தெரியும்!.. நயினார் நகேந்திரன் சர்ச்சை பேச்சு!...

தளபதி விஜய் சாலை!. முதல்வருக்கு வேறமாறி நன்றி சொன்ன கிராம மக்கள்!...

விஜயோட ஆசையே இதுதான்!. வெயிட் பண்ணி பாருங்க!.. ஹைப் ஏத்தும் எஸ்.ஏ.சி!..

திமுக இதைத்தான் பண்ணும்!. அத யூஸ் பண்ணிக்கலாம்!.. விஜய்க்கு ஐடியா கொடுத்த மாணிக்கம் தாகூர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments