1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. பரபரப்பு சம்பவம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (10:25 IST)

மேலும் 52 பேர் தற்காலிக நீக்கம் - அதிரடி காட்டும் திமுக!

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டியிடும் 52 பேர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம். 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  அதில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட கட்சியினர் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
அதன்படி 56 பேர் நீக்கப்பட்டனர். இவர்கள் திமுகவினரும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், தருமபுரி, சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனைத்தொடர்ந்து இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டியிடும் 52 பேர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.