ஷோபனாவின் நாட்டிய நாடகம்
|
கலார்ப்பணா என்ற நாட்டியப் பள்ளியை ரூ.3 கோடி செலவில் கட்டி வருகிறார் ஷோபனா.
மாயா ராவணன் நாட்டிய நாடகத்தை நடத்த இருப்பது பற்றி ஷோபனா பேசுகையில், நான் கட்டி வரும் பள்ளியின் சார்பில் மாயா ராவணன் என்ற நாட்டிய நாடகம் நடத்துகிறேன்.
ஏற்கனவே அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட இந்நாடகம் இரண்டாவ முறையாக சென்னையில் வரும் 18ஆம் தேதி மியூசிக் அகாடமியில் நடக்க உள்ளது.
இதில் முக்கிய பாத்திரங்களுக்கு நடிகை ரேவதி, சுஹாசினி, தபு போன்றவர்கள் பின்னணிக் குரல் கொடுக்கின்றனர்.
இந்த நாட்டியத்தையும், நடனப்பள்ளியையும் எனது அத்தைகள் லலிதா, பத்மினி, ராகினிக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று ஷோபனா கூறினார்.
பேட்டியின்போது நடிகைகள் ரேவதி, சுஹாசினி, நடிகர் வினித் ஆகியோர் உடன் இருந்தனர்.
