திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (13:21 IST)

காஜல் அகர்வால் பிறந்தநாளில் வெளியான ஸ்பெஷல் போஸ்டர்!

காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ரிலீஸ்

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.

தற்போது கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது 35வது பிறந்தநாளை  கொண்டாடும் காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் ஸ்பெஷலாக மொசகல்லு என்ற தெலுங்கு படத்தின் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர். இப்படத்தில் காஜலுக்கு ஜோடியா விஷ்ணு மஞ்சு நடிப்பது குறிப்பிடத்தக்கது.