1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (13:26 IST)

53 வயதில் கர்ப்பம் ஆன நடிகை ரேகா... புகைப்படம் வெளியிட்டு ரசிகர்ளுக்கு அதிர்ச்சி!

53 வயதில் கர்ப்பம் ஆன நடிகை ரேகா...  புகைப்படம் வெளியிட்டு ரசிகர்ளுக்கு அதிர்ச்சி!
‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா. தொடர்ந்து அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். 
 
தமிழ்,  மலையாளம், தெலுங்கு பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது முதல் படமான ‘கடலோரக் கவிதைகள்’ படத்தை யாராலும் மறக்க முடியாது. அதில்  டீச்சர் கேரக்டரில் அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் வட்டாரத்தை கூண்டோடு கவர்ந்தார். அதை அடுத்து அவருக்கு பெயர் வாங்கித் தந்த படம் ‘புன்னகை மன்னன்’. இந்தப் படத்தையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.  
53 வயதில் கர்ப்பம் ஆன நடிகை ரேகா...  புகைப்படம் வெளியிட்டு ரசிகர்ளுக்கு அதிர்ச்சி!
இந்த அளவிற்கு சிறந்து விளங்கிய நடிகை ரேகா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மீண்டும் ஒரு ரவுண்ட் வருகிறார். தற்போது 53 வயதாகும் அவர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாய் புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆம், நடிகை ரேகா "மிரியம்மா" என்ற புது படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கர்ப்பிணியாக இருக்கும் பஸ்டர் லுக் போஸ்டர் தான் இது. வித்யாசமான இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது.