இதற்கு மேலும் தாங்குவாரா உச்ச நட்சத்திரம்?

Cauveri Manickam| Last Modified சனி, 29 ஏப்ரல் 2017 (16:01 IST)
கடந்த 2011ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபோதில் இருந்தே கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கிறாராம் உச்ச நட்சத்திர நடிகர். ‘அதிகம் அலட்டிக் கொள்ளக்கூடாது’ என்று மருத்துவர்கள் அவரை எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய ரசிகர்களுக்காகத் தொடர்ந்து நடித்து வருகிறார்.

 
 
இருந்தாலும், மிகப்பெரிய ரிஸ்க் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர் இயக்குநர்கள். அதனால்தான், பிரமாண்ட இயக்குநர் தற்போது இயக்கியுள்ள இரண்டாம் பாகத்தில், வில்லனான பாலிவுட் நடிகருக்கு அதிக காட்சிகள் இருக்கும்படி கதையை மாற்றினார். 12 நாட்கள் தொடர்ந்து ரசிகர்களைச் சந்திக்கும் திட்டத்தையும் கைவிட்டது, அவருடைய உடல்நிலையைக்  கருத்தில் கொண்டுதான். 
 
இந்நிலையில், அவர் புதிதாக நடிக்கும் படம், ஆந்திராவில் நடக்கப் போகிறதாம். ஆந்திராவில் சும்மாவே அனல் தெறிக்கும்.  அதுவும், கொதிக்கும் இந்தக் கோடை வெயிலில் ஐஸ் பெட்டிக்குள் உட்கார்ந்தால் தான் தப்பிக்கலாம் என்ற நிலை. இப்போது  போய் அங்கு ஷூட்டிங் வைத்திருப்பதால், வெயிலை உச்ச நட்சத்திரத்தால் தாங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்  சில அனுதாபிகள்.


இதில் மேலும் படிக்கவும் :