திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2017 (15:58 IST)

குடியால் பாதிக்கப்படும் பிரபல நடிகர்: வருத்தத்தில் சுமார் மூஞ்சி ரசிகர்கள்

சினிமாவில் தனக்கென்று  ஒரு இடத்தை பிடித்த பிரபல நடிகர் தற்போது எப்போதும் குடி போதையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.


 

 
சினிமாவில் பல ஆண்டு காலம் போராடி தற்போது தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் சுமார் மூஞ்சி குமார். இவர் நடிக்கும் படம் என்றாலே அது நன்றாக இருக்கும் என்ற நிலையில் ஏற்பட்டு பெரிய இடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் படப்பிடிப்புகளில் எப்போதும் குடி போதையில் இருப்பதாக செய்திகள் பரவுகின்றன.
 
இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். குடியால் அழிந்துபோன பல நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இவர் வரக்கூடாது என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.