சினிமா துறையில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ் செய்வது உண்மைதான்: மனம் திறக்கும் நடிகை கஸ்தூரி!

Sasikala| Last Modified ஞாயிறு, 12 மார்ச் 2017 (13:23 IST)
தமிழ் சினிமாவில் (90 -களில்) பிரபலமான ஹீரோயினாக இருந்தவர் கஸ்தூரி. தமிழில் பிரபு நடித்த 'சின்னவர்' படத்தில்  கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. ஏராளமான மலையாள படங்களிலும் கஸ்தூரி நடித்தார். அதன்பிறகு அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
 
 
நடிகை கஸ்தூரிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் மகள் நடனம் கற்றுக் கொள்வதற்காக சென்னை வந்துள்ள  அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகைகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசுவார்கள், அதிக  சம்பளம் கேட்பார்கள், சில படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பார்கள், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்கள்.
 
சில சினிமா பிரபலம் ஒருவர் எதிர்பார்த்தது போன்று நடக்காததால் என்னை சில படங்களில் இருந்து நீக்கியுள்ளனர். அதுவும்  ஒரேயொரு ஹீரோவால் தான் எனக்கு இப்படி நடந்தது. அவருடன் ஒரு படம் நடித்தபோது, படப்பிடிப்பில் என்னை சீண்டிக்  கொண்டே இருப்பார். நான் அதை கண்டுகொள்ளாததால், மேலும் இரண்டு படங்களில் இருந்து என்னை வெளியேற்றினார்.
 
சினிமா துறையில் பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது உண்மைதான். இது கால காலமாக  நடந்து வரும் ஒன்று என நடிகை கஸ்தூரி மனம் திறந்து சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமையை  தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :