1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By CM
Last Updated : வெள்ளி, 25 மே 2018 (20:29 IST)

‘சாமி 2’வில் நம்பர் நடிகை இருக்காரா? இல்லையா?

'சாமி 2’ படத்தில் சின்ன நம்பர் நடிகை நடிக்கிறாரா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

 
 
விக்ரம் நடிப்பில் ஹிட்டான படம் ‘சாமி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி. ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
 
முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், அதில் ஹீரோயினாக நடித்த சின்ன நம்பர்நடிகையை சில காட்சிகளில் நடிக்கக் கேட்டனர். முதலில் ஒத்துக்கொண்ட அவர், பின்னர் முடியாது என்று விலகிவிட்டார்.
 
அவரை சமாதானபடுத்தி விடலாம் என நினைத்து, அவர் இல்லாத காட்சிகளைப் படமாக்கினர். இப்போது படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதால், சின்ன நம்பர் நடிகை சமாதானமாகி நடித்தாரா? அல்லது அவருக்குப் பதிலாக வேறு யாரும் நடித்திருக்கிறார்களா? எனக் குழம்பி வருகின்றனர் ரசிகர்கள்.