1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (15:19 IST)

நழுவிய நம்பர் நடிகை

வயசானாலும், இன்றைக்கும் நம்பர் நடிகையின் ராஜ்ஜியம் தான் கோலிவுட்டில். ஒன்றிரண்டு படங்களில் மட்டும் ஹீரோவுக்கு  ஜோடியாக நடிப்பவர், பெரும்பாலான படங்களில் தனியாக ஆவர்த்தனம் செய்து வருகிறார். 


 
 
அப்படி, தனித்து பர்பாமென்ஸ் பண்ண ஸ்கோப் உள்ள ஒரு கதையை நம்பர் நடிகையிடம் சொல்லியிருக்கிறார், மஞ்சள்  சேலையை விரும்பும் கண்ணாடி இயக்குநரின் உதவியாளர் ஒருவர். நடிகைக்கும் கதை பிடித்துவிட, உலக அளவில் படம் தயாரித்துவரும் ஒரு வெளிநாட்டு நிறுவனமும் தயாரிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டது. ஆனால், அந்தக் கதை இலங்கைப் பெண்ணைப் பற்றிய கதை என்பதால், உடன் இருப்பவர்கள் ஏகத்துக்கும் பயமுறுத்தினார்களால். இதனால், அந்தப் படத்தில்  இருந்து நழுவி விட்டார் நம்பர் நடிகை.