1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By CM
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (18:17 IST)

அண்ணன் நடிகர் மீது அப்செட்டில் சிங் நடிகை

அண்ணன் நடிகர் மீது ஏகத்துக்கும் அப்செட்டில் இருக்கிறாராம் சிங் நடிகை.



கோலிவுட்டில் அறிமுகமான சிங் நடிகையை யாரும் கண்டு கொள்ளாததால், டோலிவுட் பக்கம் தாவினார். அங்குள்ள ரசிகர்கள் அவருடைய கவர்ச்சிக்கு மயங்க, டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரத் தொடங்கினார். ஆனால், கோலிவுட்டில் மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்தது. தமிழ், தெலுங்கில் ரிலீஸான ஒரு படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். அவருடைய நேரம், அந்தப் படமும் ஊத்திக் கொண்டது.

இருந்தாலும், தம்பி நடிகருக்கு ஜோடியாக நடித்த படம் சூப்பர் ஹிட்டாகியிருப்பதால், சந்தோஷத்தில் இருந்தார் நடிகை. அந்தப் படத்தின் புரமோஷன் சமயத்தில், அண்ணன்  நடிகர் அடுத்து நடிக்கும் படத்திலும் அவர்தான் ஜோடி என்று கூறப்பட்டது. ஆனால், அதில் தற்போது மலர் டீச்சர் நடிக்க இருப்பதால், அண்ணன் நடிகர் மீது அப்செட்டில் இருக்கிறாராம் சிங் நடிகை.