’மகாமாநாடு’ போல் மகாமுஃப்தி திரைப்படம் அறிவிப்பு வருமா?

Last Modified வெள்ளி, 11 அக்டோபர் 2019 (10:03 IST)
இளையதலைமுறை நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் சிம்புவை போல் ஒரு நடிகர் இல்லை என்றே கூறலாம். ஆனால் அவர் தனது ரசிகர்களை நல்வழிப்படுத்துவது மற்றும் தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது சரியான திரைப்படங்கள் கொடுப்பதிலும் தவறி வருகிறார்
சிம்பு ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார் என்றால் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு அவர் சரியாக செல்ல மாட்டார் என்று பல வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த தவறை சிம்பு இப்போதும் திருத்திக் கொள்வதாக தெரியவில்லை

சமீபத்தில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் முஃப்தி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிம்பு, சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வராததால் இந்த படமே டிராப் செய்யப்பட்டு விட்டதாக ஞானவேல்ராஜா அறிவித்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சமீபத்தில் இதே பிரச்சினை காரணமாக தான் வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ‘மாநாடு’ என்ற திரைப்படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்டதும் உடனடியாக ’மகாமாநாடு என்ற படத்தை நடித்து இயக்க உள்ளதாக சிம்புவின் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த படம் இப்போதைக்கு ஆரம்பிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியே

அதேபோல் தற்போது முஃப்தி திரைப்படம் டிராப் செய்யப்பட்டுள்ளதால் ’மகா முஃப்தி’ என்ற திரைப்படத்தை நடித்து இயக்குவதாக சிம்புவிடம் இருந்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும், சிம்புவிடம் இருந்து வெளிவரும் அறிவிப்புகள் அனைத்தும் அறிவிப்புகள் ஆக மட்டுமே இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :