வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2017 (17:39 IST)

அடிக்கடி வதந்தியில் சிக்கும் ‘பாகுபலி’ நாயகன்..

‘பாகுபலி’ நாயகனுடன் வேறு வேறு பெண்களை இணைத்து அடிக்கடி வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.


 

 
வீட்டில் திருமண ஏற்பாடுகளைச் செய்தபோது, ‘பாகுபலி’க்கு அப்புறம்தான் எதுவாக இருந்தாலும் என்று கண்டிஷன் போட்டார் இந்த ஹீரோ. ஆனால், படம் முடிந்ததும், ஜோடியாக நடித்த நடிகைக்கும், இவருக்கும் காதல், விரைவில் திருமணம் என்று செய்தி வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை எனத் தெரிந்துவிட்டது.
 
இந்நிலையில், ஹீரோவுக்கும், சிமெண்ட் கம்பெனி ஓனரின் பேத்திக்கும் அடுத்த வருடம் திருமணம் என செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன. இருவரின் புகைப்படங்களையும் இணைத்தும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இருவரது குடும்பமும் இதைப்பற்றி வாய் திறக்காததால், இதுவும் வதந்தியாகத்தான் இருக்கும் எனத் தெரிகிறது.