பொங்கலுக்கும் ரசிகர்களை ஏமாற்றிய அஜித்!.. ஐயோ பாவம்..
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் அஜித். அமராவதி படம் தொடங்கி இதுவரை 63 படங்களில் நடித்து விட்டார். கடந்த 30 வருடங்களாகவே விஜய்க்கு போட்டி நடிகரக வலம் வந்தார். துவக்கத்தில் பல வருடங்கள் பல படங்களில் சாக்லேட் பாயாக நடித்து வந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறினார். தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் இவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதேநேரம் அந்த படம் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் அஜித்தின் அடுத்த பட அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்குனர் என்பது மட்டுமே இப்போதுவரை உறுதியாகியிருக்கிறது. அஜித் 185 கோடி வரை சம்பளம் கேட்பதால் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை எனத் தெரிகிறது.
ஒருபக்கம், அஜித்தின் புதிய பட அறிவிப்பு இந்த பொங்கலுக்காவது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் தயாரிப்பாளர் இன்னும் உறுதியாகாததால் இந்த பொங்கலுக்கும் அஜித் படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாது என தற்போது செய்திகள் கசிந்துள்ளது. இது அஜித் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.