செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By papiksha joseph
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (09:43 IST)

நீங்க அப்பவே இப்படித்தானா? ரம்யா கிருஷ்ணனின் இளமை புகைப்படம் இணையத்தில் வைரல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ள நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிவகாமி கதாபாத்திரத்தின் மூலம் தன்பக்கம் ஈர்த்தார்.
 
தொடர்ந்து பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தான் நடிக்கும் அத்தனை படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்வவதில் சிறப்பு மிக்கவர். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறந்து விளங்கி வருகிறார். 

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகை ரம்யா கிருஷ்ணனின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் கவர்ச்சி ததும்ப இருக்கும் ரம்யாவை பார்த்து நீங்க அப்பவே இப்படித்தானா...? என வியந்து கமெண்ட்ஸ் செய்து கிளாமரை ரசித்துத்தள்ளியுள்ளனர் ரசிகர்கள்.