1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (13:03 IST)

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காத நடிகை

வாய்ப்புகள் இல்லையென்றாலும், தன் கொள்கையை மாற்றிக்கொள்ள மாட்டேன் எனப் பிடிவாதமாக இருக்கிறாராம் தேவசேனா நடிகை.


 

 
பிரமாண்ட சரித்திரப் படத்தில் தேவசேனாவாக நடித்தவர் இந்த நடிகை. ஒரு படத்துக்காக வெயிட் போட்டுவிட்டு, அதைக் குறைக்க முடியாமல் சில வருடங்களாக அவதிப்பட்டு வருகிறார். ஆனாலும், அவரை வைத்துப் படமெடுக்க தயாரிப்பாளர்கள் ஆசைப்படுகின்றனர்.
 
அதுவும் பிரமாண்ட படத்துக்குப் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், எல்லாமே கமர்ஷியல் கதைகளாகத்தான் வருகிறதாம். அதனால், எந்த வாய்ப்புகளையுமே நடிகை ஏற்றுக் கொள்ளவில்லையாம். ‘நல்ல கதையாக இருந்தால் மட்டுமே நடிப்பேன்’ என்ற கண்டிஷனில் இருந்து கீழே இறங்க மாட்டேன் என்கிறாராம்.
 
‘குண்டாக இருக்கிறாரே... வாய்ப்பு தந்து காப்பாற்றலாம் என நினைத்தால் இப்படிப் பிடிவாதமாக இருக்கிறாரே...’ என்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். அவர் கைவசம் தற்போது ஒரே ஒரு படம் மட்டும்தான் இருக்கிறதாம்.