1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (09:15 IST)

ஒல்லி இசையமைப்பாளருக்குத் தூதுவிடும் ஒல்லி நடிகர்?

வெற்றிகள் கைநழுவிப் போவதால், மீண்டும் ஒல்லி இசையமைப்பாளருடன் இணைந்துவிடலாமா என யோசிக்கிறாராம் ஒல்லி நடிகர். 


 

 
தன் மனைவியின் உறவினரான ஒல்லி இசையமைப்பாளரும், ஒல்லி நடிகரும் ஒரு காலத்தில் நகமும், சதையுமாக இருந்தவர்கள். தன் படத்தில் இசையமைப்பாளராக்கி அழகு பார்த்த ஒல்லி நடிகர், அவர் இசையில் பாடல்கள் எழுதியதோடு, பாடவும் செய்தார்.
 
ஆனால், சிவ நடிகரால் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. தற்போது சிவ நடிகருடன் ஒல்லி இசையமைப்பாளர் நெருக்கமாக இருக்கிறார். எனவே, வேறொரு இசையமைப்பாளரைத் தன் படங்களுக்கு இசையமைக்க வைத்தார் ஒல்லி நடிகர். ஆனால், அது ஒர்க் அவுட் ஆகாததோடு, படங்களுக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே, மறுபடியும் ஒல்லி இசையமைப்பாளருடன் இணைந்துவிடலாமா என்று யோசித்து வருகிறாராம் ஒல்லி நடிகர்.