1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. olli actor dont like that bright music director

இசையமைப்பாளரைக் கண்டுகொள்ளாத ஒல்லி நடிகர்

ஒல்லி நடிகர்
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஒல்லி நடிகர், அதில் ஹீரோவாக நடித்துள்ள இசையமைப்பாளரைப் பற்றிக் குறிப்பிடாதது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.



 


ஒருகாலத்தில் ஒண்ணுமண்ணாக இருந்தவர்கள் பிரகாச இசையமைப்பாளரும், ஒல்லி நடிகரும். இருவருக்கும் இடையில் ஏதேதோ காரணங்களால் சண்டை மூள, அவரைவிட்டு விலகி தன் மனைவியின் உறவினரான ஒல்லியை இசையமைப்பாளராக ஆக்கினார் ஒல்லி நடிகர். ஒல்லி இசையமைப்பாளருக்கும், நடிகருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு, அவரிடம் இருந்து விலகியிருப்பது தனிக்கதை.

ஒல்லி நடிகரிடம் ஏற்பட்ட பிரச்னையால்தான், பிரகாச இசையமைப்பாளர் ஹீரோ அவதாரம் எடுத்தார் என்பது கோடம்பாக்கத்தின் தகவல். ரஜினி படத்தின் தலைப்பில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார் பிரகாசம். இந்தப் படத்தை, நடன இயக்குநராக இருந்த ஒருவர் இயக்குகிறார்.
நடன இயக்குநரும், ஒல்லி நடிகரும் நெருக்கம் என்பதால், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஒல்லி நடிகர் நேற்று முன் தினம் ரிலீஸ் செய்தார். மறந்தும் கூட இந்தப் படத்தின் ஹீரோவான பிரகாசத்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. என்னதான் பிரச்னையாக இருந்தாலும், பொதுவெளியில் கூடவா இப்படி நடந்து கொள்வது என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவில் டிரம்பை கலாய்த்து படம் எடுக்கிறார்கள் - மெர்சலுக்கு ஆதரவாக விஷால்