கொரோனா வைரஸ் எதிரொலி: ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா ரத்தா?

master
‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா ரத்தா?
Last Modified திங்கள், 9 மார்ச் 2020 (21:44 IST)
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா முதலில் கல்லூரி ஒன்றின் வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தமிழக அரசும் எதிர்ப்பு காரணமாக எந்த கல்லூரியும் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி தரவில்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து நட்சத்திர ஓட்டலில் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர். இட வசதி குறைவு என்பதால் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் படக்குழுவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறப்பட்டது
இதனால் விஜய் ரசிகர்கள் ஒருபுறம் ஏமாற்றம் அடைந்தாலும் இன்னொருபுறம் இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவி நேரடி ஒளிபரப்பு செய்யவிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

இந்த நிலையில் தற்போது நட்சத்திர ஓட்டலிலும் இசை வெளியீட்டு விழா நடப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிர்க்குமாறும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது

இதனை அடுத்து மாஸ்டர் படக்குழுவினர்களுக்கு இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து மாஸ்டர் படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இசை வெளியீட்டு விழா ரத்து செய்வது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை என்றும் இப்பொழுது வைரை மாஸ்டர் படக்குழுவினர் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :