திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By papiksha
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2019 (13:11 IST)

அசுரத்தனமான கதை கூறிய இயக்குனர் - வேண்டாம்டா சாமின்னு கும்பிடு போட்டு அனுப்பிய டாப் நடிகர்!

தமிழ் சினிமாவின் ஹிட் பட இயக்குனர்களில் முக்கியமானவரான அந்த பிரபல இயக்குனர் சமீபத்தில் அசுரத்தனமான படத்தை இயக்கி மாபெரும் வெற்றிக்கண்டார். இந்த படத்தை அடுத்து கோலிவுட்டின் தற்போதை டாப் நடிகரை அந்த இயக்குனர் சந்தித்து கதை கூறினாராம். 
 
ஆனால், அது முழுக்க முழுக்க சாதி பிரச்னைகளை பற்றி பேசும் கதையாக இருந்ததாம். பொறுமையாக கதைக்கேட்ட அந்த டாப் டக்கர் நடிகர் கதைக்கேட்டு முடித்ததும் அயோ ....சாமி இந்த மாதிரி கதையே வேண்டாம் ஆள விடுங்க என கும்பிடு போட்டு அனுப்பி வைத்தாராம். இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அந்த அசுரத்தனமான இயக்குனர், என் படங்களில் சமூக பிரச்னைகளை மட்டும் பேசியே ஏகப்பட்ட சர்ச்சைகள் உண்டாகிறது. இதில் சாதி பிரச்சனை என்றால் அவ்வளவு தான்... இதெல்லாம் எனக்கு செட் ஆகாது என கூறி அந்த டாப் ஹீரோ நிராகரித்து விட்டார் என கூறினார்.
 
கதைகளை தேர்வு செய்வதிலும். அதனால் மக்களும் ஏற்படும் பாதிப்புகளை குறித்தும்  ஆரம்பத்திலே அலசி ஆராய்ந்து முடிவெடுப்பதில் கில்லி போல இருந்து வருகிறார் அந்த டாப் ஹீரோ.