1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. brother director waiting for ulaga nayagan calsheet

உலக நாயகன் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குநர்

kisu kisu
உலக நாயகன் கால்ஷீட் கொடுத்தால்தான் மூன்று வருடங்களுக்கும் மேலாக கிடப்பில் இருக்கும் ஒரு படம் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


 


‘தேசிய விருது’ பெற்ற அந்த இயக்குநர், பெரியாரின் பெயரைக் கொண்டவர். சினிமாவுக்கு வந்த 10 வருடங்களில், 5 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். அவை அனைத்துமே போற்ற வேண்டிய படங்கள்தான். நவரசத்தை நடிப்பில் வெளிப்படுத்தும் நாயகனை வைத்து ஒரு படத்தை எடுத்தார் இயக்குநர். அந்தப் படத்தை, பிரதர்ஸ் என்பதை நிறுவனத்தின் பெயராகக் கொண்ட இயக்குநர் தான் தயாரித்தார்.

ஆனால், அவர் தயாரிப்பில் உலக நாயகனும், பிரகாச நடிகரும் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஊத்திக்கொள்ள, இந்தப் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒன்றல்ல, இரண்டல்ல… மூன்று வருடங்களாக இந்த நிலை தொடர்கிறது. உலக நாயகனும், பிரகாச நடிகரும் உதவினால்தான் மீண்டெழ முடியும் என்ற நிலையில் இருக்கிறார் தயாரிப்பாளர்.

இதற்காக பஞ்சாயத்து பேசப்பட்டு, அவருக்கே பத்து கோடியை குறைத்துக் கொண்டு உலக நாயகன் கால்ஷீட் கொடுப்பது என்றும், அந்தப் படத்தை பச்சை நிறுவனம் தயாரிக்கும் என்றும் முடிவானது. ஆனால், கால் ஆபரேஷன் காரணமாக தன்னுடைய படத்தையே முடிக்க முடியாமல் தவித்துவரும் உலக நாயகன் எப்போது இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்கப் போகிறார் என்பதுதான் கேள்விக்குறி.
About Writer
cauveri manickam
அடுத்த கட்டுரையில்
இளம் இயக்குநர் மீது கடுப்பில் இருக்கும் நடிகை