1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (19:47 IST)

வம்புவின் ராஜ தந்திரம்

ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்துவரும் வம்பு நடிகர், அதிலிருந்து தப்பிக்க ராஜ தந்திரம் ஒன்றைச் செய்துள்ளார்.


 

 
வம்பு நடித்து சமீபத்தில் வெளியான படம் படுதோல்வி, ட்விட்டரில் இருந்து விலகல் என ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறார் வம்பு நடிகர். ஒரு படத்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் இயக்கி நடிக்கப் போவதாகவும் தெரிவித்தார். அது என்ன ஆனது என்று தெரியாத நிலையில், தூங்கிக் கொண்டிருந்த தெலுங்குப் படத்தை தூசி தட்டி எடுத்திருக்கிறார்.
 
பிரிவுக்குப் பின் வம்புவும், பெரிய நம்பர் நடிகையும் நடித்த இந்தப் படம், தமிழில் கடந்த வருடம் வெளியானது. ஆனால், தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரிலீஸாகாமல் தூங்கிக் கொண்டிருந்தது. அதனை தூசி தட்டி, அடுத்த மாதம் 8ஆம் தேதி ரிலீஸ் செய்யப் போகிறார் வம்பு. இந்தப் படத்தை வம்புவின் தந்தையே தயாரித்துள்ளார்.