1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: வியாழன், 22 ஜூன் 2017 (22:26 IST)

அனுஷ்காவின் அறுவை சிகிச்சைக்கு ஆர்யா காரணமா? திடுக்கிடும் தகவல்

'பாகுபலி புகழ் நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது 'பாகுமதி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு இளவரசி கேரக்டர் என்பதால் கண்டிப்பாக உடலை குறைக்க வேண்டும் என்று இயக்குனர் கறாராக கூறிவிட்டார்.



 


'பாகுபலி 2' தயாரிப்பாளர் போன்று தன்னால் உடலை ஸ்லிம் ஆக காண்பிக்க சிஜி வேலைக்கு ரூ.3 கோடி செலவு செய்ய முடியாது என்றும், எப்படியாவது உடலை குறைத்து கொண்டு வாருங்கள் என்று இயக்குனர் கூறிவிட்டாராம்

ஒரு யோகா டீச்சராக இருந்தும் தன்னால் ஆர்யாவுடன் நடித்த 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக ஏற்றிய உடம்பை குறைக்க முடியவில்லையே என்று ஆதங்கத்தில் உள்ளாராம் அனுஷ்கா. இந்த நிலையில் ஸ்ரீதேவி உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் பயிற்சி மேற்கொண்ட வெளிநாட்டு எடைக்குறைப்பு சிகிச்சை மையம் ஒன்றை கடைசி முயற்சியாக அனுஷ்கா எடுத்துள்ளாராம்

இதுதான் கடைசி முயற்சி, இந்த முயற்சியில் பலன் கிடைக்காவிட்டால், வேறு வழியில்லை அறுவை சிகிச்சை தான் என்று அனுஷ்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது