வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (11:28 IST)

நாளை அறிமுகமாகும் எம்.ஐ டிவி! – குறைந்த விலை 4K டிவி!

ஜியோமி நிறுவனத்தின் குறைந்த விலை 4கே டிவி நாளை முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மொபைல் விற்பனையில் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஜியோமி நிறுவனம் தற்போது டிவி விற்பனையிலும் இந்தியாவில் தன்னை நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நவீன தொழில்நுட்பம் கொண்ட டிவிக்களை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தி வருகிறது.

தற்போது 55 இன்ச் அளவுக்கொண்ட 4கே டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஜியோமி. டால்பி சவுண்ட் மற்றும் டிடிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட 20 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 வசதியை கொண்டுள்ளது இந்த டிவி.

2 ஜி.பி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதிக்கொண்ட இந்த டிவியில் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற வசதிகளும் உள்ளன. மேலும் வைஃபை, ப்ளூடூத் வசதிகளும் இதில் உள்ளது.

நாளை முதல் அமேசான் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு வரும் இந்த டிவியின் விலை 34,999 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.