திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (13:37 IST)

சவுண்டுக்காகவே தயாரிக்கப்பட்ட நோக்கியா டிவி!

இந்தியாவில் மொபைல் விற்பனையில் முன்னனி வகித்து வந்த நோக்கியா நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட் டிவி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் குவாலிட்டியான ஆடியோ ஸ்பீக்கர்களை விற்பனை செய்து வரும் ஜேபிஎல் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளது நோக்கியா. முழுக்க முழுக்க ஆடியோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. ஜேபிஎல் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்களில் டால்பி ஆடியோ, டிடிஎஸ் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

50 இன்ச் க்ளவுட் தொடுதிரை அமைப்புடன் 4கே யூஹெச்டி தரத்தில் இது வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த டிவியில் தேவையான கேம்ஸ், ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது சிறப்பு.

இதன் உத்தேச விலை 70 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்த வருடம் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.