திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (21:40 IST)

கணினியை காலால் இயக்கினால் ஆரோக்கியம் பெருகும்

வாட்டர்லுா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உடலை அசைத்து, வளைத்து கணினியை இயக்கும் 'டாப்-கி-க்ளிக்' என்ற முறையை உருவாக்கி உள்ளனர்.


 

 
கணினி முன் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது உடலுக்கும், கண்களுக்கும் நல்லதல்ல என்று தொடர்ச்சியாக ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. எழுந்து நின்று வேலை செய்ய, உயர்ந்து தாழும் மேசைகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. 
 
இந்நிலையில் கனடாவிலுள்ள வாட்டர்லுா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உடலை அசைத்து, வளைத்து கணினியை இயக்கும், 'டாப்-கி-க்ளிக்' என்ற முறையை உருவாக்கி உள்ளனர். பெரும்பாலும் கைகளாலும், விசைப் பலகையாலும், மவுஸ் மூலமும் தான் கணினியை இயக்கி வருகிறோம்.

ஆனால், வாட்டர்லுா விஞ்ஞானிகள், கணினியை பயன்படுத்துவோர் நின்றபடியே வேலை செய்யவேண்டும் என்பதோடு, கால்களை அசைத்தும், மடக்கியும், தட்டியும், உதைத்தும் உடலை சற்று வளைத்தும் கணினியை இயக்க வேண்டும் என்ற முறையை கண்டுபிடித்துள்ளனர்.
 
மேலும் கடவுச்சொல் போல் குறிப்பிட்ட முறையில் உடலை அசைத்தால் குறிப்பிட்ட வலைதளங்கள் திறக்கும் படி ஏற்பாடு செய்துள்ளனர். இதன்மூலம் கணினி பயன்படுதுவதும் உடற்பயிற்சி செய்தும் ஒன்றாகிவிடும்.