நீக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்களை திரும்ப பெறலாம்; வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

Whatsapp
Last Updated: திங்கள், 16 ஏப்ரல் 2018 (17:01 IST)
நீக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை மீண்டும் திரும்ப பெறும் வசதி வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 
வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த தகவல்களை மீண்டும் பெற முடியாத நிலை உள்ளது. தற்போது வாட்ஸ்அப் பீட்டா இன்போ மூலம் டெலிட் செய்த தகவல்களை மீண்டும் திரும்ப பெறு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புகைப்படங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள் என அனைத்தையும் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
 
இந்த புதிய அப்டேட் 2.18.106 மற்றும் 2.18.110 ஆகிய அப்டேட்டுகளுக்கு இடையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப் 2.18.105 வெர்ஷனில் இயங்கி கொண்டு இருக்கிறது.
 
அடுத்த வரக்கூடிய அப்டேட்டில் இந்த வசதி இருக்கும் என பயனர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :