இனி பாஸ்வேர்ட் தேவையில்லை: புதிய வழிகாட்டும் ஃபேஸ்புக்


Abimukatheesh| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:29 IST)
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன் அவரிசையில் தற்போது பாஸ்வேர்ட் இல்லாமல் ஃபேஸ்புக் கணக்கில் லாக் இன் செய்யும் வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது.

 

 
ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. பயனர் இடைமுகத்தை மென்மேலும் எளிய முறையில் வடிவமைத்து கொண்டு வருகிறது.
 
இந்த வரிசையில் தற்போது பாஸ்வேர்ட் இல்லாமல் ஃபேஸ்புக் கணக்கில் லாக் இன் செய்யும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஃபேஸ்புக் கணக்கை லாக் இன் செய்ய மொபைல் எண் போதும். உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நீங்கள், உங்களது மொபைல் எண்ணை பதிவி செய்திருந்தால் போதுமானது.
 
கணக்கில் லாக் இன் செய்யும் போது கொடுக்கப்படும் மொபைல் எண்ணும், கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் ஒன்றா என சரி பார்த்த பின்னர் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு லாக் இன் ஆகிவிடும்
 
இதனால் நீங்கள் உங்கள் பாஸ்வேர்டு குறித்து கவலைப்பட வேண்டாம். மேலும் இதை பாதுக்காப்பான முறையில் பயன்படுத்த, மொபைல் எண்ணை டைப் செய்தவுடன் OTPயானது உங்கள் மொபைல் போனுக்கு வரும். அதைக்கொண்டு நீங்கள் மேலும் பாதுக்காப்பான முறையில் கணக்கில் உள்நுழையலாம்.
 


இதில் மேலும் படிக்கவும் :