திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (10:16 IST)

வேலிடிட்டியை அதிகப்படுத்துங்கள்! – நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு!

நாடு  முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரீசார்ஜ் ப்ளான் வேலிடிட்டியை அதிகரிக்க சொல்லி நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளி முடங்கி கிடக்கின்றனர். பலர் தங்களது உறவினர்களுக்கு அழைத்து பேச செல்போன்களையே அதிகம் நம்பியுள்ளனர். தற்போது அத்தியாவசிய கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் நெட்வொர்க் நிறுவனங்கள் முடிந்தளவு ரீசார்ஜ் செய்வதை ஆன்லைன் மூலம் செய்யுமாறு வாடிக்கையாளர்களை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ட்ராய் புதிய உத்தரவை அனுப்பியுள்ளது. அதன்படி மொபைல் நெட்வொர் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கான வேலிடிட்டி காலத்தை அதிகப்படுத்த வேண்டும். 21 நாட்கள் ஊரடங்கில் இருக்கும் மக்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வேலிடிட்டி கால நீட்டிப்பு டாக்டைம் ரீசார்ஜுகளுக்கு மட்டுமே மொபைல் நிறுவனங்கள் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. டேட்டா ப்ளான் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு வேலிடிட்டி வழக்கம் போலவே தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.