1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 18 மார்ச் 2017 (07:11 IST)

ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய திருடர்கள் பயன்படுத்தும் நவீன டெக்னிக்

தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதோ, அதேபோல் திருடர்களும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.






பொதுவாக ஸ்மார்ட்போனை லாக் செய்ய பேட்டர்ன், பாஸ்வேர்ட், கைரேகை ஆகிய முறைகள் இருக்கும். இதனால் போன் திருடப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர் பயன்படுத்த முடியாது என்றுதான் இவ்வளவு நாள் நம்பிக்கொண்டிருந்தோம்

ஆனால் ஸ்மார்ட்போனில் லாக் செய்ய பயன்படுத்தப்பட்டும் பேட்டர்ன், பாஸ்வேர்டை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்கள் மிக எளிதாக அன்லாக் செய்து விடுகிறார்கள். ஸ்மார்ட்போனினை கைகளைப் பயன்படுத்தி அன்லாக் செய்யும்போது போனின் திரையில் கைகளின் வெப்பம் சுமார் 30 விநாடிகளுக்கு நீடிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஸ்மார்ட்போன் திரையை தெர்மல் கேமிரா மூலம் திருடர்கள் புகைப்படமாகப் பதிவு செய்கின்றனர். அந்த புகைப்படத்தினைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் பேட்டர்ன் அல்லது ரகசிய குறீயீட்டு எண்களை திருடர்கள் அறிந்துகொள்வதாகவும் தெரியவந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டூட்கர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.