1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (12:22 IST)

வீட்டு பெரியவர்களுக்கு வாங்கி தர சரியான பட்டன் ஃபோன்! – Nokia 3210 4G அறிமுகம்!

Nokia 3210 4G
இந்தியாவில் 90ஸ் காலம் முதலாக பிரபலமாக இருந்து வரும் நோக்கியாவின் புதிய பட்டன் ஃபோன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.



இந்தியாவில் 90ஸ் காலம் முதலாக பட்டன் ஃபோன் புழக்கத்தில் இருந்த சமயத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த ஃபோன் தயாரிப்பு நிறுவனம் நோக்கியா. தற்போது நோக்கியா நிறுவனம் HMD நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் நிலையில் தனது பழைய மாடல் பட்டன் ஃபோன்களை புதிய டெக்னாலஜியுடன் தொடர்ந்து மறு அறிமுகம் செய்து வருகிறது.

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தெரியாத பெரியவர்களுக்கு இந்த வகை பட்டன் ஃபோன்கள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது இந்நிலையில் தற்போது 4ஜி தொழில்நுட்பத்துடன், UPI Payment, யூட்யூப் உள்ளிட்ட பல வசதிகளுடன் நோக்கியா தனது புதிய Nokia 3210 4G ஃபோனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த Nokia 3210 4G ஃபோன் 2.4 இன்ச் TFT ஸ்க்ரீனை கொண்டுள்ளது. 240x320 பிக்சல் திரையை கொண்டுள்ளது. யுனிசாக் டி107 சிப்செட்டில், 1GHz ப்ராசஸரில் இயங்குகிறது.

இதில் 64 MB RAM உடன் 128 MB இண்டெர்னல் மெமரி உள்ளது. 32 ஜிபி வரை மெமரி கார்ட் சப்போர்ட் செய்கிறது. 4ஜி தொழில்நுட்பத்தில் டூவல் சிம் கார்டுகள் மாட்டும் வசதியுடன் வந்துள்ளது. ப்ளூடூத் வசதியும் இதில் உள்ளது.

1450 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த Nokia 3210 4G ஃபோன் யூஎஸ்பி டைப் சி சப்போர்ட் செய்கிறது.

மேலும் யூட்யூப், யூபிஐ பேமண்ட் வசதிகளுடன் வெளியாகியுள்ளது இந்த Nokia 3210 4G

இந்த Nokia 3210 4G ஃபோன் ஸ்கூபா ப்ளூ, ஒய்2கே கோல்டு, க்ரஞ்ச் ப்ளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.3,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K