வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (10:39 IST)

எந்த மொழியில் பேசினாலும் சொந்த மொழியில் கேட்கலாம்..! அதிரடியான AI தொழில்நுட்பத்தில் வெளியாகும் Samsung Galaxy S24 Ultra!

Samsung Galaxy S24 Ultra
பிரபலமான சாம்சங் நிறுவனம் தற்போது AI தொழில்நுட்பத்துடன் கூடிய தனது புதிய Samsung Galaxy S24 சிரிஸை சந்தையில் வெளியிட உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.



தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை ஸ்மார்ட்போன்களில் புகுத்தி புதிய மாடல்கள் அவ்வபோது வெளியாகி வருகின்றன, அந்த வகையில் கடந்த சில மாதங்களில் உலகை புரட்டி போட்டுள்ள ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு என்னும் AI தொழில்நுட்பம். பல துறைகளிலும் இந்த AI தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதை ஸ்மார்ட்போனிலும் புகுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்

தற்போது சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியாகவுள்ள Samsung Galaxy S24 சிரிஸ் ஸ்மார்ட்போன்களில் AI தொழில்நுட்ப வசதி உள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வேறு மொழிகளில் யார் பேசினாலும் கூட உடனடியாக அதை AI மொழிபெயர்த்து உங்கள் மொழியிலேயே கேட்க வைக்கும். ஒரே நேரத்தில் உலகில் உள்ள 13 மொழிகளில் இதுபோல அந்த AI ஆல் மொழிபெயர்க்க முடியும். மேலும் பல வசதிகளை கொண்ட Galaxy AI என்ற தொழில்நுட்பம் இதற்காக சாம்சங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த Samsung Galaxy S24 சிரிஸ் மாடல்கள் Samsung Galaxy S24, Galaxy S24+ மற்றும் Galaxy S24 Ultra ஆகிய மூன்று வேரியண்டுகளில் வெளியாக உள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த Samsung Galaxy S24 வேரியண்டுகளை ரூ.1999 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும். பின்னர் ஸ்மார்ட்போன் விலை அதிகமாக தோன்றினால் முன்பதிவு தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K