புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:53 IST)

விற்பனைக்கு வந்த ஐந்தே மாதத்தில் விலை உயர்ந்த சாம்சங் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. விற்பனைக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ஆம், சாம்சங் கேலக்ஸி ஏ52 விலை ரூ. 1,000 உயர்த்தப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிகப்பட்டுள்ளது. அதன்படி, சாம்சங் கேலக்ஸி ஏ52 புது விலை விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 27,499 எனவும் சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 28,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.