வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (13:23 IST)

குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்தது Samsung F15 5G மொபைல்..! இத்தனை வசதிகள் உள்ளதா..? முழு விவரம்..

Samsung Mobile
சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட் போன் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது . இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.
 
சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் தான் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்
 
6.5-இன்ச் புல்எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியும் உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 5 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

6100 பிளஸ் சிப்செட்:
 
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 6100+ chipset) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அறிமுகமாகியுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா:
 
சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உதவியுடன் இந்த போன் அறிமுகம் ஆகி உள்ளது.

Samsung
மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்:
 
சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி:
 
6000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.

 
யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.  இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.11,999 விலையில் விற்கப்படுகிறது.