ரிலையன்ஸ் ஜியோ பயனருக்கு ரூ.27,000 பில்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 23 நவம்பர் 2016 (17:28 IST)
கொல்கத்தாவைச் சேர்ந்த ஜியோ சிம் பயனாளி ஒருவருக்கு ரூ.27,718.5/- செலுத்த வேண்டும் என்ற பில் புகைப்படம் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.

 
 
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இண்டர்நெட், வாய்ஸ் கால் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில் இந்த பில் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இது குறித்து, ஃபேஸ்புக்கில் ஒன்றில் போலி ஜியோ பில் உருவாக்கிய நபர் கைது என்ற போஸ்ட் மூலம் போலி பில் தான் என்பதை உறுதி செய்யும் விதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
எனினும் ரிலையன்ஸ் ஜியோவின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இது குறித்து விளக்கம் ஏதும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் பில் ஜியோ சார்பில் அனுப்பப்பட்டிருந்தால் பலருக்கும் அனுப்பட்டிருக்க வேண்டும். ஜியோ சார்பில் எவ்வித தகவலும் இது குறித்த வழங்கப்படவில்லை என்பதால் இது புரளியாகவே கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :