1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (16:11 IST)

ஜியோ வெல்கம் ஆஃபர் பார்ட் - 2: மக்களே ரெடியா??

டிசம்பர் மாத இறுதியோடு முடிவடையும் ஜியோ வெல்கம் ஆஃபரின் இரண்டாம் பகுதி டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 


 
 
டிராய் கட்டுப்பாடு: 
 
எந்த ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் விளம்பர வாய்ப்பும் 90 நாட்கள் வரம்பு கொண்டிருக்க வேண்டும் என்ப்த் டிராய் கட்டுப்பாடு. இதனால் ஜியோவின் வெல்கம் ஆஃபர் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆரம்பித்து டிசம்பர் 3, 2016 அன்று முடிவடைகிறது.
 
அம்பானியின் இலக்கு:
 
ஆனால், முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு முடிவுக்குள் 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளார். 
 
இதனால், வெல்கம் ஆஃபர் 100 மில்லியன் பயனர்களை அடையும் நோக்கில் நீடிக்கப்படலாம். 
 
ஜியோ வெல்கம் ஆஃபர் பார்ட் 2 என இலவச சேவையை அடுத்த 2017-ஆம் ஆண்டு மார்ச் வரை நீடிக்கப்பட்டால் 100 மில்லியன் பயனர்கள் இலக்கு சாத்தியமான ஒன்று.
 
யாருக்கு வெல்கம் ஆஃபர் 2 ??
 
வெல்கம் ஆஃபர் 2 புதிய ஜியோ பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதனால் ஏற்கனவே வெல்கம் ஆஃபர் அனுபவித்துக் கொண்டிருந்தாள் வெல்கம் ஆஃபர் 2 அனுபவிக்க இயலாது.
 
அறிவிப்புகள்:
 
வெல்கம் ஆஃபர் 2 மேலும் 90 நாட்கள் செல்லுபடியாகும் ஒன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படியானால் இந்த சலுகை மார்ச் 2017 வரை வரும். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.