ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
 1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (09:30 IST)

ரெட்மி, போக்கோவுக்கு செம போட்டி.. இந்தியாவில் அறிமுகமாகும் Nothing Phone 2a! – சிறப்பம்சங்கள் என்னென்ன?

Nothing Phone 2A
இந்தியாவில் பிரபலமான ரெட்மி, போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு போட்டியான சிறப்பம்சங்களுடன் களம் இறங்குகிறது Nothing Phone 2a.


 
நத்திங் நிறுவனம் முன்னதாக வெளியிட்ட Nothing Phone 1 உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்து வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அடுத்த மாடலான Nothing Phone 2a எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் தொடர்ந்து வந்த நிலையில், இந்தியாவில் மார்ச் 12ம் தேதி Nothing Phone 2a ஸ்மார்ட்போன்கள் விற்பனையை தொடங்குவதாக அறிவித்துள்ளதுடன் அதன் வேரியண்ட்கள் மற்றும் விலையும் வெளியாகியுள்ளது.

Nothing Phone 2a சிறப்பம்சங்கள்:
 • 6.7 இச்ன் ஃப்ளெக்சிபில் அமோலெட் டிஸ்ப்ளே
 • 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்
 • மீடியாடெக் டைமென்சிட்டி 7200 ப்ரோ சிப்செட்
 • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் சார்ந்த Nothing OS 2.5
 • 8 ஜிபி / 12 ஜிபி ரேம்
 • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
 • 50 MP + OIS&EIS ப்ரைமரி டூவல் கேமரா
 • 32 MP முன்பக்க செல்ஃபி கேமரா
 • 60 FPS வீடியோ ரெக்கார்டிங், 120 FPS ஸ்லோ மோஷன் ரெக்கார்டிங்
 • 5000 mAh பேட்டரி, 45 W பாஸ்ட் சார்ஜிங் வசதி
 • டூவல் சிம் 5G, மேம்படுத்தப்பட்ட ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 5.3
Nothing Phone 2A

 
இந்த சிறப்பம்சங்களோடு ஒப்பிடுகையில் இந்த Nothing Phone 2a ஸ்மார்ட்போன் Redmi Note 13 Pro மற்றும் POCO X6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த Nothing Phone 2a மாடலில் முந்தைய மாடலை போலவே பின்பக்க எல்.இ.டி லைட் பேனல் உள்ளது. Nothing Phone 2a முந்தைய மாடலை போலவே வொயிட் மற்றும் டார்க் கிரே வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை 8GB + 128GB மாடல் ₹23,999 ஆகவும்,  8GB + 256GB மாடல் ₹25,999 ஆகவும், 12GB + 256GB மாடல் ₹27,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 12ம் தேதி விற்பனையை தொடங்கும் இந்த Nothing Phone 2a ஐ தள்ளுபடி மற்றும் சலுகைகளை பயன்படுத்தி ரூ.19,999க்கு வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K