1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (11:32 IST)

வெறும் 59-க்கு கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்??

ரூ.11,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆன்லைனில் ரூ.59-க்கு வாங்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனா நம்பித்தான் ஆகனும்.


பிளிப்கார்ட்டில் நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மீதுதான் இந்த அதிரடி சலுகை விற்பனை வழங்கப்பட்டுள்ளது. ரூ.11,999 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனைபிளிப்கார்ட் தளம் ரூ.9,799க்கு விற்பனை செய்கிறது. இதனுடன் மேலும் பல சலுகைகள் வழங்கப்பட்டு இது ரூ.59-க்கு கிடைக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு…

# பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 490 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்.
# நோக்கியா சி21 பிளஸில் ரூ.9,250 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகின்றது.

இந்த இரு தள்ளுபடிகளையும் பயனர்கள் பெற முடியும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.59-க்கு கிடைக்கும்.

குறிப்பு: எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி பெற மாற்றம் செய்யப்படும் ஸ்மார்ட்போனின் நிலை நன்றாக இருப்பதையும் போனின் மாடல் லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும். 

Edited by: Sugapriya Prakash