நோக்கியா 3310 கிளாசிக்: 3ஜி வெர்ஷன் விரைவில்....


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (17:39 IST)
நோக்கியா நிறுவனத்தின் கிளாசிக் மொபைல் மாடலான 3310 விரைவில் 3ஜி வெர்ஷனில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
 
2ஜி வேகத்தில் இணைய சேவையை வழங்கும் நோக்கியா 3310 கிளாசிக் மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 3ஜி சேவையை வழங்குவதற்கேற்ப மாற்றப்பட்டுள்ளது.
 
மேலும், புதிய நோக்கியா 3310 3ஜி போன் ஆனது ஜகான்ஸ் மற்றும் தீம்களை தேர்ந்தெடுப்பதற்கான புதிய விருப்பங்களுடன் வருகிறது. 
 
முன்பு வெளியான 2ஜி சேவையை வழங்கிய 3310 மாடலில் உள்ள அத்தனை சிறப்பு அம்சங்களையும் பெற்றிருக்கும் என தெரிகிறது. அதோடு சேர்த்து மற்ற சில புதி சிறப்பு அம்சங்களை 3ஜி சேவைக்கேற்ப இணைத்திருக்க கூடும் என்று தெரிகிறது.
 
அஸூர், சார்கோல், வார்ம் ரெட் மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும். இது தோராயமாக 88 கிராம் எடையுடையது. இதன் விலை ரூ.5,320 நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :