டெக்னாலஜியின் புதிய அத்தியாயம்: டிரான்ஸ்பரண்ட் ஐபோன்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 27 ஜனவரி 2017 (12:09 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல் அனைத்தும் கிட்டத்தட்ட  ஒரே மாதிரியாக இருப்பதால் ஐபோன் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 
 
இதனை சரிசெய்யும் வகையில் ஆப்பிள் ஐபோன் 8 மாடல், உலகில் வெளிவராத மாடல் ஒன்றின் உரிமையை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
ஆப்பிள் ஐபோன்: 
 
இதுவரை வெளிவந்த அனைத்து போன்களிலும் உள்ளே என்னென்ன இருக்கின்றது என்பதை வெளியில் பார்க்க முடியாது. ஆனால் முதல் முறையாக உள்ளே இருக்கும் பொருட்களை பார்க்கும் வகையில், டெக்னாலஜி அடங்கிய மாடலை ஆப்பிள் வெளியிட உள்ளதாம். 
 
அதாவது, டிஸ்ப்ளே வழியாக போனின் உள்ளே இருக்கும் பாகங்களையும் வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையிலான பேடண்ட் உரிமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளதாம். 
 
அதாவது கிட்டத்தட்ட டிரான்ஸ்பரண்ட் மாதிரியான டெக்னாலஜி பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் ஆப்பிள் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :