செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (14:38 IST)

199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்

இந்திய பார்வையாளர்களை கவர்வதற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் புதிய ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

உலக அளவில் வெப் சிரீஸ் மற்றும் திரைப்படங்கள் வெளியிடுவதில் மிகப்பெரிய நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸ். இந்த நிறுவனம் தயாரித்து வெளியிடும் வெப் சிரீஸ்கள் உலகமெங்கும் பிரபலம். ஆனால் இந்தியாவில் அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் போன்ற செயலிகளை உபயோகிப்பவர்களை ஒப்பிடும்போது நெட்ஃப்ளிக்ஸ் உபயோகிப்பவர்கள் குறைவுதான்.

இதற்கு காரணம் நெட்ஃப்ளிக்ஸ் நிர்ணயித்துள்ள தொகை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிகமாக இருப்பதுதான். தற்போது நெட்ஃப்ளிக்ஸில் திரைப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ் பார்க்க வேண்டுமென்றால் மாதம் ரூ.499, ரூ.649 மற்றும் ரூ.799 ஆகிய ஏதெனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. குறைந்த பட்ச தொகையே 500 ரூபாய். அமேசான், ஹாட்ஸ்டாரில் இதை விட விலை குறைவுதான்.

இதையெல்லாம் கணக்கிட்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக மாதம் 199 ரூபாய்க்கு அனைத்து தொடர்களையும் பார்த்து கொள்ளலாம் என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்த உள்ளது. நிறைய பேருக்கு நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள் பிடித்திருந்தாலும் கட்டணம் அதிகம் இருப்பதால் இணையத்தில் டவுன்லோட் செய்து பார்க்கிறார்கள். இந்த புதிய சலுகை மூலம் முறையற்ற டவுன்லோடுகள் குறைவதுடன், புதிய வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்திய வாடிக்கையாளர்களை குறிவைத்து சாக்கர்ட் கேம்ஸ், டைப் ரைட்டர் போன்ற இந்தியா சார்ந்த கதைகளை தயாரித்து வருகிறது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.