1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (13:40 IST)

இவ்ளோ விலை குறைவா ஃபோனே இல்ல! சாம்சங் வெளியிடும் செம ஸ்மார்ட்போன்!

Galaxy F04
சாம்சங் நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் சாம்சங் நிறுவனம் மிக மிக குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட Galaxy F04 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

அதன் சிறப்பம்சங்களாவன:

மீடியாடெக் பி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்

6.5 இன்ச் ஹெச்டி+, 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே

4 ஜிபி ரேம் (8 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி)

64 ஜிபி மெமரி (1 டிபி வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி)

12 மெகாபிக்சல் மெயின் கேமரா, 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார்

5 மெகா பிக்சல் முன்பக்க கேமரா

ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம், ரேடியோ, ப்ளூடூத், வைஃபை வசதிகள்

யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 mAh பேட்டரி

இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த Samsung Galaxy F04 ன் விலை ரூ.7,499 மட்டுமே என சாம்சங் தனது வலைதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ.9,499 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 12ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது.

Edit By Prasanth.K