1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (10:28 IST)

ராயல் என்ஃபீல்டை பின்னுக்கு தள்ளுமா கவாஸகி! – கலக்கலான கவாஸகி எலிமினேட்டர் இந்தியாவில் அறிமுகம்!

Kawasaki eliminator
ஜப்பானை சேர்ந்த பிரபல மோட்டார் நிறுவனமான கவாஸகி அறிமுகப்படுத்தியுள்ள எலிமினேட்டர் மாடல் பைக் பலரை கவர்ந்துள்ளது.



இந்தியாவில் இளைஞர்களிடையே நீண்ட தூர சாகச பைக் பயணங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்றார்போல நீண்ட தூர பயணங்களுக்கு சிறந்த பல பைக்குகளை முன்னணி மோட்டார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. எனினும் இளைஞர்களிடையே இங்கிலாந்தை தலைமையாக கொண்ட ராயல் என்பீல்ட் பைக்குகள் மீது ஆர்வம் உள்ளது.

இந்நிலையில்தான் பிரபல ஜப்பான் மோட்டார் சைக்கிள் நிறுவனமான கவாஸகி தனது புதிய எலிமினேட்டர் மாடல் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. க்ரூயுசர் ரக பைக்கான இது ராயல் என்பீல்டு சூப்பர் மெட்டியோர் 650க்கு போட்டியாக அமையும் வகையில் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.


கவாஸகி நின்ஜா 400 மாடலில் உள்ள பாகங்கள் இந்த எலிமினேட்டரிலும் உள்ளன. 421 சிசி பேரலல் டுவின் எஞ்சின் இதில் உள்ளது. இது 49 ஹெச்பி (குதிரை திறன்) 38 நியூட்டன் மீட்டர் இழுவிசையை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த கவாஸகி எலிமினேட்டர்.

18/16 அலாய்டு வில், டெலிஸ்கோபி ஃபோர்க், பிரேக்கிங்கில் இருபக்கம் ஒற்றை டிஸ்க் ப்ரேக் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளது. சுமார் 176 எடை கொண்ட இந்த கசாஸகி எலிமினேட்டர் மாடலின் விலை இந்தியாவில் ரூ.5,62,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பைக்குகளுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K